மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு விழிப்பணர்வுப் பணியில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை செயற்பட்டு வருவதாக அதன் தலைவர் த.வசந்தராசா செவ்வாய்க் கிழமை (19) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, மண்முனை வடக்கு. ஏறாவூர் பற்று ஆகிய 4 பிரதேசத்திலுள்ள பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனது. இவ்விடையம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது விடையம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…
இம்மாதம் இறுதிவரைக்கும் எமது டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் இடம்பெறும் நாம் மேற்படி பிரதேசங்களில் அமைந்துள்ள 24 பாடசாலைகளைத் தெரிவு செய்து மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர் மத்தியிலும் டெங்கு விழிப்புணர்வில் ஈடுபட்டு வருவதேடு பாடசாலைகளில் சேர்கின்ற கழிவுகளை சேமித்து அதனை உக்கிய பசளையாக மாற்றும் தொட்டிகள், மற்றும், துப்பரவு செய்யும் உபகரணங்கள், என்பன வழங்கி வருகின்றோம்.
இவற்றினைவிட கிராமங்கள்தோறும் எமது தொடண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு டொங்கு நோய் தொடர்பான துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்கு வழங்கி வரகின்றோம்.
எமது இச்செயற்றிட்டத்தில் 25 தொண்டர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், சுhகாதார வைத்திய அதிகாரிகள், பொலிசார், செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment