மட்டக்களப்பு மாநகர சபை நிருவாகத்தின் கீழ் வரும் இருதயபுரம் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட விஜயபுரம் கிராமத்தின் பன்சாலை குறுக்கு வீதியின் ஒருபகுதி நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் காணப்படுகின்றது.
இதனால் இவ்வீதியின் ஊடாக தினமும் பயணம் செய்யும் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் குறிப்பாக நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக ஏற்கெனவே மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கும் பொதுமக்களால் தெரியப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேசப் பொது மக்கள் குறை கூறுகின்றனர்.
இக் கிராமத்தில் வசிக்கும் 54 குடும்பங்களும் தமது அனைத்து அலுவல்களையும் முடிப்பதற்காக வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டுமாயின் மாற்று வீதி ஏதுமில்லாத நிலையில் இவ்வீதி ஒன்றையே பயன்படுத்த வேண்டியுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் சீரானதும் பாதுகாப்புமிக்கதுமான பயணத்தை சீராக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி நிற்கின்றனர்.
0 Comments:
Post a Comment