22 Nov 2017

சிற்பக் கலைத்துறையில் சாதனை படைக்கும் கிராமத்து இளைஞன்.

SHARE
களி, வெண்கலம், போன்ற பொருட்களைக் கொண்டு உருவங்களையும், வடிவங்களையும், தத்துரூபமான முறையில் வடிவமைத்துவரும் தனக்கு உதவிகள் அல்லது ஆதரவுகள் எதும் கிடைக்கும் பட்டசத்தில் மேலும் அதiனை விருத்தி செய்து சிற்பக்கலைத்துறையில்  மிளிரும் இளைஞர் யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கின்றார் சிறப்பு நுண்கலைமானிப் பட்டதாரிய இளைஞன் பாலசுந்தரம் ரகுநாதன்.
மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்றுப்  பிரதேசத்தில் அமைந்துள்ளது அப்பிரதேசத்தில் உள்ளதுதான் களுமுந்தன்வெளி எனும் ஓர் குக் கிராமமாகும். அக்கிராமத்திலுள்ள பாடசாலையில் ஆரம்பக் கல்விளையும், களுதாவளை மகாவித்தியாலயத்தில் கலைத்துறையில் உயர் கல்வியையும், யாழ் பல்கலைக் கழகத்தில் கலைத்துறையிலும் பயின்று கடந்த 2015 ஆம் ஆண்டு சிறப்பு நுண்கலைமானி பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளர் மேற்படி பாலசுந்தரம் ரகுநாதன் என்ற இளைஞன் தற்போது வேவையில்லாப் பட்டதாரியாக இருந்து வருகின்றார்.

தனது கற்றலுக்கு ஏற்றால்போல் இருக்கின்ற வளத்தைக் கொண்டு களிமற்றும், வெண்கலம் ஆகிய மூலப்பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்து வருகிறார். எந்தவித இயந்திரங்களையோ இரசாயனங்களையோ பயன்படுத்தாமல், கையினால் இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு மனித உருவங்களையும், ஏனைய வேண்டிய பொருட்களையும் தத்ரூபமாக தனது சிற்பக்கலை மூலம் வெளிப்படுத்தி வரும் தனக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும் பட்டத்தில் இவற்றினை மேலும் மேம்படுத்த முடியும் என தனது அதங்கத்தைத் தெரிவிக்கின்றார்.

நான் யாழ் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத்துறையில் சிறப்பு பட்டம் பெற்றுள்ளதோடு எனNது சகோதரன் ஒருவரும் கிழக்கு பல்கலைக் கழகத்தில் கலைத் துறையில் பயிற்று வருகின்றார். சிறியதொரு கிராமமாக எமது ஊர் இருந்தலும், கலைத்துறையில் மிகவும் இன்னல்களுக்கு மத்தியில் ஓரளவேனும் மிளிர்கின்ற எமக்கு மூலம் பொருட்கள் உள்ளிட்ட சில உதவிகளே தேவைப் படுகின்றன. 

தேவையான மூலப் பொருட்க்கள் கிடைக்கும் பட்சத்தில் உள்ளுரிலும். வெளிநாடுகளிலும் தேவைப் படுகின்ற சிற்பங்களையும். சித்திரங்களையும், எம்மால் தரமான முறையில் வடிவமைத்து வழங்க முடியும் என எதிர்பார்க்கின்றேன் எனத் தெரிவிக்கின்றார். சிறப்ப நுண்கலைமானி பட்டதாரியான பாலசுந்தரம் ரகுநாதன். 







SHARE

Author: verified_user

0 Comments: