மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலாளராக சுந்தரமூர்த்தி ராஜ்பாபு திங்கட்கிழமை 06.11.2017 கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் வவுணதீவு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக கடந்த 5 வருடங்களாகப் பணியாற்றி வந்தார்.
மேலும் இவர், கடந்த காலங்களில் வாகரை, வாழைச்சேனை, வவுணதீவு ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கிரான் பிரதேச செயலகத்திலிருந்து மாற்றலாகிச் செல்லும் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் வாகரைப் பிரதேச செயலகத்திற்கு நிரந்தர பிரதேச செயலாளராக திங்கட்கிழமை முதல் 06.11.2017 கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.
தனபாலசிங்கம், கிரான் பிரதேச செயலகத்தின் நிரந்தர பிரதேச செயலாளராகவும் கடந்த சில மாதங்களாக வாகரைப் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment