இன்றைய சிறார்களை இந்துமதம் கூறும் சிறந்த அறநெறிகளைக் கற்று எதிர்கால சமூகத்தில் நற்பிரஜைகளாக உருவாக்கி, அவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளைச் செய்து ஒரு வழிகாட்டியாக திகழவேண்டும் என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
இந்து சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஆண்டு தோறும் நடாத்தப்பட்டுவரும் 'தெய்வீக கிராமம்’ நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தின் நரிப்புல்தோட்டம் கிராமத்தில் திங்கட்கிழமை 06.11.2017 நடைபெற்றது.
இந் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், நமது வாழ்க்கை சிறப்புடன் விளங்க வேண்டுமானால் மனிதனை நல்வழிப்படுத்தும் அறநெறிகளையும் அறக் கருத்துக்களையும் நாம் கற்கவேண்டும்.
பாடசாலைக் கல்வி, அறநெறிக் கல்வி இவைகளைக் கற்கும் சிறுவர்கள் ஏனைய நேரங்களில் அதிகமாக வீடுகளிலே பொழுதைக் கழிக்கின்றனர்.
இந்த நிலையில் பொற்றோர்கள் வீடுகளில் இருக்கும் தமது பிள்ளைகளுக்கு ஓய்வு நேரங்களில் அறக்கருத்துக்களையும் நற்பழக்கங்களையும் ஊட்டவேண்டும்.
அதேபோன்று தமது பிள்ளைகளை ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயங்களில் நடைபெறும் அறநெறி கல்விக் கூடத்திற்கு அனுப்பவேண்டும். இது ஒவ்வொறு பெற்றோரின் கடமையாகும்.
மனிதனை நல்வழிப்படுத்தும் நல்ல நூல்களை சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் கற்று நல்வழியில் செல்ல வேண்டும்.
எதிர்கலத்தில் நாட்டின் பல துறைகளிலும் தலைவர்களாக வரக்கூடியவர்களிடையே சிறந்த சிந்தனைகளுடன் கூடிய ஆழுமையும் ஆரோக்கியமான மனதும் இரக்ககுணமும் இருக்கவேண்டும்” என்றார்.
0 Comments:
Post a Comment