அதிக இலாபத்தை ஈட்டுவதற்காக பருவகாலத்தில் சோளன் பயிர் செய்து அறுவடை செய்த்துடன், சோளத்தில் பெறுமதிசேர் தொழில் நுட்பங்களையும், செய்முறையில் விபரிக்கும் நிகழ்வு செவ்வாய்க் கிழமை (21) மட்டக்களப்பு தாந்தாமலைக் கிராமத்தில் நடைபெற்றது.
தாந்தாமலைப் பிரதேச விவசாயப் போதனாசிரியர் பொ.சிறிபவனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.சிவஞாம், மற்றும் விவசாயிகள், விவசாயப் போதனாசிரியர்கள், உள்ளிட்டபலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment