மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனர்த்தப் பயிற்சி ஒத்திகை நிகழ்வொன்று செவ்வாய்க்கிழமை 21.11.2017 இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்த தத்ருபமான ஒத்திகை நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள், உட்பட மட்டக்களப்பு இடர் முகாமைத்துவப் பிரிவின் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டம் அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதால் அதற்காக மக்களையும் அதிகாரிகளையும் சேவையாளர்களையும் எந்நேரமும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் கருதி இந்த தத்ரூப ஒத்திகை நிகழ்வு ஏற்பாட செய்யப்பட்டிருந்ததாக மட்டக்களப்பு இடர் முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment