எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்துடன் இணைந்து, தாய்வீடு இதழ் நடத்தும் அமரர் திருமதி நாகேஸ்வரி திருநாவுக்கரசு நினைவு அனைத்துலகத் தமிழ்ச் சிறுகதைப் போட்டி 2017 இற்கு விண்ணப்பங்கள் கோரியுள்ளதாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் டாக்டர் ஓ.கே.குணநாதன் தெரிவித்தார்.
போட்டி விதிமுறைகள், உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழ்ப் படைப்பாளர்கள் இப் போட்டியில் பங்குபற்றலாம். அனுப்பப்படும் சிறுகதைக்கு பக்க வரையறை கிடையாது. சிறுகதைக்குரிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். தனித்துவமான தலைப்புக்கள் எதுவும் இல்லை. படைப்பாளர் விரும்பிய தலைப்புகளில் எழுதி அனுப்பலாம். ஒரு படைப்பாளி எத்தனை சிறுகதைகளையும் போட்டிக்காக அனுப்பி வைக்கலாம். சிறுகதை ஏலவே வெளிவந்ததாகவோ, மொழிபெயர்ப்பாகவோ, தழுவலாகவோ இருத்தல் கூடாது. சிறுகதைகள் நேரடியாக தபால்மூலம் அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் சிறுகதைகள், பாமினி வகை எழுத்துருவிலோ அல்லது யுனிகோட் எழுத்துருவிலோ தட்டச்சு செய்யப்பட்டு இருத்தல் வேண்டும்.
ஏலவே இப்போட்டிக்காக சிறுகதைகளை அனுப்பி வைத்தவர்கள் மீண்டும் அனுப்பத் தேவையில்லை. இப்போட்டி தொடர்பில் நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. சிறுகதைகளை 2017, டிசம்பர் 31 க்கு முன்பாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும். பரிசளிப்பு நிகழ்வு 2018 ஆரம்பத்தில், இலங்கை - மட்டக்களப்பில் நடைபெறும். பரிசு பெறும் சிறுகதைகள் தாய்வீடு பத்திரிகையில் பிரசுரிக்கப்படும். பரிசுக் கதைகள், தொகுப்பு நூலாக வெளியிடப்படும்.
சிறந்த சிறுகதைகளுக்கு தாய்வீடு நினைவுப் பதக்கத்துடன் முறையே -
1 ஆம் பரிசு : 20 ஆயிரம் ( இலங்கை ரூபா )
2 ஆம் பரிசு : 15 ஆயிரம் ( இலங்கை ரூபா )
3 ஆம் பரிசு : 10 ஆயிரம் ( இலங்கை ரூபா )
7 சிறப்புப் பரிசுகள் : தலா 5 ஆயிரம் ( இலங்கை ரூபா )
வழங்கிக் கௌரவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
படைப்புக்களை அனுப்ப வேண்டிய முகவரி, இலங்கையில் : டாக்டர் ஓ.கே.குணநாதன், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இல : 1 ஏ, பயனியர் வீதி, மட்டக்களப்பு, இலங்கை
கனடாவில் Thaiveedu, P.O.Box # 63581>Woodside Square, 1571
Sandhurst Cir.Toronto, ON> M1V 1VO>
Canada, Email : story@thaiveedu.com
0 Comments:
Post a Comment