19 Nov 2017

மட்டக்களப்பில் தேசிய அரச கரும மொழிக் கல்விப் பயிற்சி

SHARE
தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட 12 நாட்கள் சிங்கள மொழிப் பயிற்சி நெறியின் நிறைவு நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பில் சனிக்கிழமை (18) நடைபெற்றன.
ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் நல்லரெட்ணம் துஜோகாந்த் தலைமையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அரச கரும மொழிகள் ஆற்றலின் கீழ் சிங்கள மொழி கற்றுக் கொண்ட பல்வேறு திணைக்களங்களில் கடமையாற்றும் பல்வேறு படித்தரங்களிலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் 53 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் பயிற்சி பெற்றவர்களின் மொழித் தேர்ச்சி ஆற்றலை மேம்படுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத், மட்டக்களப்பு பிரதான பொலிஸ் பரிசோதகர் தயால் தீகஹவத்துர, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்   கே. குணநாதன், போதனாசிரியர்களான எல்.வை. அனுஷிகா லக்ஷானி, ஜி.டி. கௌஷல்யா மதுஷானி, டபிள்யூ.டி. நிரோஷிகா சந்தமாலி உட்பட இன்னும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு, அரச கரும மொழிகளின் பயன்பாட்டினை மேம்படுத்தும் வகையில் அரச கரும மொழிகளான சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பயிற்சிகளையும் இணைப்பு மொழியான ஆங்கில மொழிப் பயிற்சிகளையும் நடத்தி வருகின்றது.










SHARE

Author: verified_user

0 Comments: