ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் பிரதான வீதி – புகையிரத நிலைய வீதிச் சந்தியில் சனிக்கிழமை பிற்பகல் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து ரூபாய் 2 இலட்சம் பெறுமதியான கேரளக் கஞ்சாவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 24 வயதுடைய இளைஞனைக் கைது செய்து அவரைப் பரியோதித்தபோது அவர் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இளைஞனிடமிருந்து 1600 கிராம் கேரளக் கஞ்சாவை மீட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment