ஞாயிற்றுக்கிழமை 19.11.2017 ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் இடம்பெற்றபோட்டி நிகழ்வில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, மூதூர், கந்தளாய் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த அநாதைச் சிறார்கள் பங்கு கொண்டனர்.
போட்டிகளில் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட தரங்களைச் சேர்ந்த முதல் 3 இடங்களைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டதோடு போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஏ.ஜி.எம். பஹீ, தன்னார்வ செயற்பாட்டாளர்கள் பிரியங்கா ஜெயராஜ், மற்றும் தேவிகா காசிச்செட்டி உட்பட இன்னும் முக்கியஸ்தர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment