21 Nov 2017

மக்களின் நலன் கருதி குறுந்தகவல் சேவை

SHARE
(எம்.எஸ்.எம். சறூக்)

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம் தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி குறுந்தகவல் சேவை ஒன்றினை வழங்கிவருகின்றது. 
இதனுடாக மட்டக்களப்பு பிராந்தியத்தில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக ஏற்படும் நீர்த்துண்டிப்பு, நீர் கட்டண விபரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட இதர தகவல்களை தங்களின் கையடக்க தொலைபேசி மூலம் உடனுக்குடன் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.ஏ. பிரகாஷ் செவ்வாய்க் கிழமை (21) தெரிவித்துள்ளார். 

இச்சேவையினை தங்களின் கையடக்க தொலைபேசியில் செயற்படுத்த         F <இடைவெளி> @battiwater  என டைப் செய்து 40404 என்னும் இலக்கத்திற்கு sms செய்யவும் (உதாரணம்:-  F @battiwater send to  40404).

மேலும் இத்தகவலினை ஏனைய தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களும் இச்சேவையின் பயனை பெற்றுக்கொள்ள துணை நிற்குமாறும் கேட்டுக்கொள்வதாக மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.ஏ. பிரகாஷ் மேலும் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: