28 Nov 2017

ஏறாவூரில் ஒவ்வாமை உணவு நோயாளிகளின் மல சலம் உட்பட உணவு மாதிரிகள் ஆராய்ச்சிக்கு கொழும்புக்கு அனுப்பி வைப்பு

SHARE
ஏறாவூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட விடயம் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டு நோயாளிகளின் மலம், சலம் உட்பட பரிசோதிக்கப்பட வேண்டிய அனைத்து உணவு மாதிரிகளையும் தாம் கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிப் பரிசோதனை நிலையத்திற்குக் கையளித்துள்ளதாக பிரதேச சிரேஷ‪;ட மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எம்.புலேந்திரகுமார் திங்கட்கிழமை 27.11.2017 தெரிவித்தார்.
ஏறாவூர் பள்ளியடி வீதியிலுள்ள திருமண  வீடொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2017 அன்று பரிமாறப்பட்ட கோழி இறைச்சி பிரியாணியை உட்கொண்டதையடுத்து உடல் உபாதைக்குள்ளான 53 பேர் ஞாயிற்றுக்கிழமை 26.11.2017 காலை தொடக்கம் நண்பகல் வரை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்து சேர்ந்திருந்தனர்.

இது குறித்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய தாங்கள் மேற்படி திருமண விரு;துபசாரத்திற்காக பரிமாறப்பட்ட உணவு சமைக்கப்பட்ட இடத்தில் காணப்பட்ட உபகரணங்கள், சமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட அரிசி, கடலை உட்பட உணவுகளின் மாதிரிகள், பாத்திரங்கள் மற்றும் நோயாளிகளின் மலம், சலம் உட்பட பல்வேறு மாதிரிகளை உடனடியாகச் சேகரித்து கொழும்பிலுள்ள உணவு மருத்துவ ஆராய்ச்சிப் பரிசோதனை நிலையத்திற்கு திங்கட்கிழமை 27.11.2017 கையளிக்கப்பட்டுள்ளது.

உடல் உபாதைக்குள்ளானவர்கள் தங்களுக்கு தொடர்ச்சியான வயிற்று வலி, வாந்தி தலைச் சுற்று, வயிற்றுப் போக்கு காணப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
முதலில் வயிற்றுவலியும் அதனைத் தொடர்ந்து  வயிற்றுப்போக்கும் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டர்கள் மேலும் கூறினர்.

சமையல்காரரது வீட்டிலேயே திருமண பரிமாறலுக்கான உணவு சமைக்கப்பட்டதாக திருமண வீட்டார் தெரிவிக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: