3 Nov 2017

உயர்தர மாணவியின் சடலம் மீட்பு

SHARE
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் கற்கும் மாணவியொருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்டகப்பட்;டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்மாதுறை சுடரொளி வீதியை அண்டியுள்ள வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு முதலாம் ஆண்டில் கல்வி பயிலும், இராசன் விதுஷிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடைசியாக இவர் கடந்த திங்கட்கிழமை 30.10.2017 பாடசாலைக்கும் அதன்பின்னர் அன்றைய தினம் மாலையில் பிரத்தியேக வகுப்புக்கும் சென்று வந்துள்ளார் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பெற்றோர் வீட்டில் இல்லாத சமயமே இந்த மாணவி வீட்டில் இறந்து நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் துவங்கியுள்ளனர்.
இந்த மாணவிக்கு தன்னிலும் பார்க்க சுமார் 13வயது கூடிய, அவுஸ்திரேலியா சென்று திரும்பியிருந்த ஆடவர் ஒருவரை பெற்றோர் திருமணத்துக்காக நிச்சயித்திருந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. 


SHARE

Author: verified_user

0 Comments: