தேசிய மட்ட கபடி போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று தொடர்சாதனை நிலையாட்டிய மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று வித்தியாலய முதல்வர் திரு.சு.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் பிரன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, சிறப்பு அதிதிகளாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், விசேட அதிதிகளாக வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம்.சுகுணன் பிரதிகல்விப் பணிப்பாளர் எஸ்.ஞானராசா, முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்புள் குணவர்த்தன ஆகியோரும், கிராமம்சார்ந்த சங்கங்கள், கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது போட்டியில் பங்குபற்றி சாதனை நிலைநாட்டிய மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பிரதம பயிற்றுவிப்பாளரும் உடற்கல்வி ஆசிரியருமாகிய திரு இ.புவேந்திரகுமார் “உடற்கல்வி போராசன்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மற்றும் உதவி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய ஞா.கிருஸ்ணராஜா அவர்களுக்கும் மாணவர்களை வழிப்பபடுத்திய அதிபர் பிரதிஅதிபர் ஆகியோருக்கும் வாழ்ந்து மடல் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment