கடந்த6மாதத்தில் யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் காலி உட்பட நாட்டின் பல்வேறுபகுதிகளில் 2700 பேர் பாரிசவாத நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் எனதேசிய பாரிசவாத சங்கத்தின் தலைவர் நரம்;பியல் வைத்திய நிபுணர் எம்.ரி.எம்.றிப்ஸி தெரிவித்தார்.
சர்வதேச பாரிசவாத நோய் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக மட்டக்களப்புபோதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை 02.11.2017 இடம்பெற்ற விழிப்புணர்வுமற்றும் பாரிசவாத தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகளின் பின்னூட்டலில் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், உலகெங்கிலும் வாழும் மக்களில் ஆறுபேரில் ஒருவர் என்ற அடிப்படையில் 2 செக்கன்களுக்கு ஒருவர் பாரிசவாததாக்குலுக்கு உள்ளாகிப் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களில் 3 வீதமானோரே மீளமுடிகின்றது. ஆயினும் மட்டக்களப்பில் பாரிச வாதநோய்த் தாக்குலைக் குணப்படுத்துவதில் முன்னேற்றம் காணப்பட்;டுள்ளது.
இதனால் நாங்கள் மட்டக்களப்பில் முன்னுதாரணமாகக் கொண்டு அடுத்தாண்டுபெப்ரவரி மாதம் 24ஆம் திகதி தேசிய பாரிச வாத தாக்குதல் பற்றிய விழிப்புணர்வுப்பேரணியை நடாத்தத் தீர்மானித்துள்ளளோம்.
பொதுமக்கள் இன்னமும் விழிப்பூட்டப்பட வேண்டியவர்களாக உள்ளார்கள்.
பாரிச வாதத்தை முறியடிப்பதில் வைத்தியசாலை நிருவாகம் மட்டும் அக்கறைஎடுத்தால் போதாது ஒட்டு மொத்த சமூகமும் இந்த விடயத்தில் அக்கறை எடுக்கவேண்டும்.” என்றார்.
0 Comments:
Post a Comment