மட்டக்களப்பில் 11302 இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் 45 பாடசாலைகளுக்கும் குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாம் பவுண்டேஷன் (PALM FOUNDATION) நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் அருள் சக்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மேலும் (05.11.2017) கருத்துத் தெரிவித்த அவர்,
மட்டக்களப்பின் குடி நீர்த் தேவையுள்ள பிரதேசங்களில் மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் hல் நடையாகச் சென்று அலைந்து குடிநீரைப் பெறவேண்டியுள்ளது.
அதேவேளை, சுத்தமான குடிநீர் மிக மிக அவசியம். இதனைக் கருத்திற் கொண்டு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் நன்மையடைந்துள்ளார்கள்.
யூ.எஸ்.எயிட்டின் நிதி உதவியைக் கொண்டு பாம் பவுண்டேசனுக்கூடாக 2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 11302 இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நன்மைய பயக்கக் கூடியதாக நீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் நலன்கருதி மட்டக்களப்பின் குடி நீர்த் தேவையுள்ள 45 பாடசாலைகளைச் சேர்ந்த 18546 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ள தமது நிறுவனம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், 40 கிணறுகள் அமைக்கப்பட்டும் மேலும் 1600 கிணறுகள் புனரமைக்கப்பட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment