மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர பொறுப்பதிகாரி எஸ்.சிவதாஸ் ஞாயிற்றுக் கிழமை (26) தெரிவித்தார்.
சனிக்கிழமை (25) காலை 8.30 மணிமுதல் ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணிவரையில் மாவட்டத்தில் 75.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு, ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணிமுதலை முற்பகல் 11.30 மணிவரை 32.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இவ்வருடத்தில் ஞாயிற்றுக் கிழமை (26.11.2017) காலை 8.30 மணிவரையில் 1363.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர பொறுப்பதிகாரி எஸ்.சிவதாஸ் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment