மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் மர்மமான முறையில் குடும்ப பெண் ஒருவர் உயிரிந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
களுவாஞ்வாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலய வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்துவந்த குடும்ப பெண் ஒருவர் சனிக்கிழமை (07) காலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார். தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தாயான 27 வயதுடைய அகிலேஸ்வரன் புஸ்ப்பராணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காலைவேளையில் உயிரிழந்த பெண்ணின் 5 வயதுடைய பெண் குழந்தையின் பலத்த அழுகுரலை அவதானித்த வீதியில் சென்றவர்ள் உள்ளே சென்று பார்த்தவுடன் குறித்த குழந்தையின் தாய் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இவ்விடையம் குறித்து பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கி தகவலையடுத்து இஸ்த்தலத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவரும், அவரது தாயும் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் நிலையில் குறித்த பெண்ணும் அவரது 5 வயதுடைய பெண்குழந்தையும், பெண்ணிய் தந்தயுமாக குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தந்த வெள்ளிக்கிழமை அவரது உறவினர்களிடம் வெல்லாவெளிப் பகுதிக்குச் சென்றுள்ளார். சனிக்கிழமைஅதிகாலை தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள் உயிழந்து கிடப்பதை அவதானித்ததாகவும் உயிரிழந்த பெண்ணி தந்தை தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment