மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தினால் நடத்தப்படும் வாழ்வோசை செவிப்புலனற்றோர் பாடசாலையில் பல்வேறு ஆக்கத்திறன் செயற்பாடுகளில் பயற்சிகளை முடித்துக் கொண்ட 22 இளைஞர் யுவதிகளுக்கு இலத்தரனியல் நிபுணத்துவ தொழிற் தகைமைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் பொதுச் செயலாளர் ஜெகன் ஜீவராஜ் தெரிவித்தார்.
கணனித் தொழிநுட்பம், படப்பிடிப்புக் கருவிகளைக் கையாளுதல், அச்சக தொழிற்துறைப் பயிற்சிகள், மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் தொழினுட்பப் பயிற்சிகள் போன்றவற்றின் தொழிற்தகைமைக்குத் தயார்படுத்தும் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் பயிற்சி மண்டபத்தில் திங்கட்கிழமை 16.10.2017 இடம்பெற்றது.
6 மாதகால உட்கள வெளிக்களப் பயிற்சியை முடித்துக்கொண்டவர்களுக்கு தொழில்தரு நிறுவனங்களிடம் நிரந்தரத் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான இணைப்பாக்கம் செய்யப்படும் என ஜீவராஜ் மேலும் தெரிவித்தார்.
உலக கனேடியப் பல்கலைக் கழக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் இப்பயிற்சி நெறிகள் இடம்பெறுகின்றன.
0 Comments:
Post a Comment