மாகாண சபைகள் எல்லை நிர்ணயக் குழுவின் செயலாளரால் 2017-10-13ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புத் தொடர்பாக தமது ஆட்சேபனைகளை தெரிவித்துக்கொள்வதாக ஏறாவூர் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்திக்கான மனித சேவைகள் நிறுவனம் “;” Sri Lanka SHED Foundationஅறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் கே. அப்துல் வாஜித் செவ்வாய்க்கிழமை 17.10.2017 அனுப்பி வைத்துள்ள ஆட்சேபனை மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@
ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை சட்டத்திற்கு முரணாக அமைந்திருப்பதனாலும், மாகாண சபைகள் தேர்தல் சட்டத்திற்கமைவாக அது இடம்பெற்றிருக்கவில்லை என்பதனாலும் இந்த ஆட்சேபனைகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பின்வரும் காரணங்களுக்காக எங்களது ஆட்சேபனைகள் அமைந்திருக்கின்றன.
பிரிவு 3 (3) 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டம்,
3. (3). மாகாணத்தின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை பின்வரும் அடிப்படையில் ஆணையாளரால் தீர்மானிக்கப்படும்:
நிர்வாக மாவட்டத்தில் ஒவ்வொரு 40,000 குடியிருப்பாளர்களுக்கும் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.
மேலும் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த 2012ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இதற்கு மாற்றமாக 2012ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்புத் தரவுடன் தொடர்புபடுத்தாத வகையில், வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதை நாம் அவதானிக்கின்றோம்.
எனவே ஸ்ரீலங்கா “ஷெட்” பவுண்டேசன் இதனை ஆட்சேபிக்கின்றது.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக மக்களிடமும் பொது அமைப்புக்களிடமும் கருத்தறியும் விதத்தில் அமைந்த மேற்படி அறிவித்தலுக்கமைய இந்த ஆட்சேபனைகளை ஸ்ரீலங்கா “ஷெட்” பவுண்டேசன் முன் வைத்துள்ளதாக அப்துல் வாஜித் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment