துறைநீலாவணை லயன்ஸ் ஸ்டார் சாம்பியன் கிண்ணத்தை களுதாவளை கெனடிக் விளையாட்டுக்கழகம் தட்டிக்கொண்டது. துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22.10.20)இடம்பெற்ற மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்திலே சாம்பியண் கிண்ணத்தை களுதாவளை கெனடிக் விளையாட்டுக்கழகம் அதிக ஓட்டங்களை குவித்து பெற்றுக்கொண்டது.
துறைநீலாவணை லயன்ஸ் ஸ்டார் விளையாட்டுக்கழகம் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியை ஒருமாத காலமாக நடாத்தியது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த 32 விளையட்டுக்கழங்கள் பங்குபற்றியது.
இறுதிப்போட்டிக்கு துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்கழகம், களுதாவளை கெனடிக் விளையாட்டுக்கழகம் ஆகியன தெரிவு செய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட இரண்டு அணிகளுடையிலான நாணய சுழற்ச்சி இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற களுதாவளை கெனடிக் விளையாட்டுக் கழகத்தின் அணியினர் துடுப்பெடுத்து ஆடியது. துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்கழக அணியினர் களத்தடுப்பை சிறப்பாக முன்னெடுத்தார்கள். இதன்போது கெனடிக் விளையாட்டு அணியினர் 08 ஓவருக்கு ஆறு விக்கட்டுக்களை இழந்து 90 ஓட்டங்களை குவித்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய துறைநீலாவணை மத்திய விளையாட்டுகழக அணியினர் 08 ஓவர்களில் ஏழு விக்கட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களை குவித்தார்கள். இதன் வெற்றிபெற்ற அணியினருக்கு கிண்ணங்கள், பணப்பரிசு வழங்கும் நிகழ்வு துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் துறைநீலாவணை லயன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவனுமான சிவகுமார்-வியாசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தலைவர் கே.யோகராசா,அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சோ.சந்திரகுமார் மற்றும் லயன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் பிரதிநிதிகள், மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டார்கள்.
முதலாவது இடத்தைப் பெற்ற களுதாவளை கெனடிக் விளையாட்டு அணியினருக்கு பத்தாயிரம் (10000)பணப்பரிசும்,சாம்பியன் கிண்ணமும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது. இரண்டாம் இடத்தை தட்டிக்கொண்ட துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்கழக அணியினருக்கு 7500 பணப்பரிசும், கிண்ணமும் வழங்கிவைக்கபட்டது. தொடர் ஆட்ட நாயகனாக துறைநீலாவணை மத்திய விளையாட்டுகழக கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தி.தயாளனும், ஆட்டநாயகனாக களுதாவளை கெனடிக் விளையாட்டுக்கழக கிரிக்கெட் அணியைச் சேர்ந்த கே.நீலாம்பரனும் தெரிவு செய்யப்பட்டு அதிதிகளால் வெற்றிக்கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
0 Comments:
Post a Comment