19 Oct 2017

நோயாளியான வயோதிபரின் சைக்கிளைக் கைப்பற்றிக் கொண்டு திருடன் பதற்றமின்றிப் பயணம்

SHARE
ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளி ஒருவரின் சைக்கிளைத் திருடிக் கொண்டு திருடன் பதற்றமின்றிச் செல்லும் காட்சி சிசிரிவி காணொளிக் கமெராவில் பதிவாகியிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மிச் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூரைச் சேர்ந்த எம். முஹம்மது சாலி (வயது 75) என்ற வயோதிபர் தனது உடல் அசௌகரியத்துக்குச் சிகிச்சை பெறுவதற்காக மிச்நகர் பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

அந்நேரம், எவருடைய சைக்கிளையாவது திருடிச் செல்வதற்கு நோட்டமிட்டுக் காத்திருந்த திருடன் வயோதிபர் சைக்கிளை வைத்து விட்டு வைத்தியசாலைக்குள் உள் நுழைந்ததும் உடனடியாக சைக்கிளைத் திருடிக் கொண்டு சென்றுள்ளான்.

இந்தக் காட்சிகள் சிசிரிவி காணொளிக் கமெராவில் பதிவாகியுள்ளன.
இச்சம்பவம் பற்றி  விசாரணையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் திருடனை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: