15 Oct 2017

வீதி விபத்தில் சிக்கியவர் மரணம்

SHARE
வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏறாவூர் மிச்நகரைச் சேர்ந்த முஹம்மத் பாயிஸ் (வயது 32) என்பவர் சிகிச்சை பயனளிக்காமல் வெள்ளிக்கிழமை மரணடமடைந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த 6ஆம் திகதி திருகோணமலையிலிருந்து மோட்டார் சைக்கிளில் தனியாக ஏறாவூரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்போது 07.30 மணியளவில் பனிச்சங்கேணி எனுமிடத்தில் வைத்து விபத்திற்கு உள்ளானார்.

அதிவேகமாக வரும்போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் விழுந்து தலையில் படுகாயமேற்பட்டதால் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்திசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவம் பற்றி வாகரைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: