17 Oct 2017

கேழி முந்தியதா,முட்டை முந்தியதா என்பதல்ல பிரச்சனை அபிவிருதிகள் கிடைத்ததா இல்லையா என்பதுதான் பிரச்சனையாகும் - அமீரலி.

SHARE
கேழி முந்தியதா அல்லது முட்டை முந்தியதா என்பதல்ல பிரச்சனை இந்த மாவட்ட மக்களுக்கு, அபிவிருதிகள் கிடைத்ததா இல்லையா என்பதுதான் பிரச்சனையாகும். இந்த விடையத்தில் அரசியல் தலைவர்களாகிய நாங்கள் எல்லோரும் மிகவும் தெழிவாக இருக்க வேண்டும், ஏனெனில் மக்கள் மிகவும் தெழிவாக இருக்கின்றார்கள். ஏனெனில் இந்த நிகழ்வு நடைபெறமாட்டாது என சில முக நூல்களிலும், தொடர்பு சாதனங்களிலும் எழுதியிருந்தார்கள், இது இந்த மாட்டத்தை அசிங்கப்படுத்தியதாகவும், அருவருக்கத்தக்கதாகவுவே நான் பார்க்கின்றேன். இந்த மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியவர்கள் யாரும் அப்படி எழுதுவதற்கு முன்வந்திருக்கமாட்டார்கள் அப்படி எழுதியிருந்தால் அவர்களுக்கு கை கூசியிருக்கவேண்டும்.
என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியையும், எழுவாங்கரைப் பகுதியையும் இணைக்கும் மற்றுமொரு ஓடத்துறையாகக் காணப்படும் மண்டூர் - குருமண்வெளி பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சனிக்கிழமை (14) மாலை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்துவிட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்….

இவ்வாறான விழாக்கள் இந்த மாவட்டத்திலே அதிக அதிகமாக இன்னுமின்னும் நடக்கவேண்டும். அதிகம் அமைச்சர்கள் வரவேண்டும், அதிகம் வீதிகள் போடப்பட வேண்டும், பாலங்கள் கட்டப்பட வேண்டும், அவ்வாறெனில்தான் எமது பிரச்சனைகள், இந்த நாட்டின் நல்லாட்சியினுடைய அர்த்தம், நாங்கள் ஆட்சியையும், அரசாங்கத்தையும் ஆதரிப்பதற்கான கருத்து, மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெழிவாகும் என நாங்கள் நம்புகின்றோம். 

1400 மில்லியன் ரூபாய் பணத்தை இந்த அரசாங்கம் இந்த தொகுதிக்கு ஒதுக்கீடு செய்திருக்கின்றது என்றால் நல்லாட்சியின் பங்கு இப்பகுதி மக்களுக்குக் கிடைத்திருக்கின்றது என்றுதான் அர்த்தம்.

இப்பகுதி விவசாய சமூக உடனடியாக நன்மைபெற இருக்கின்றது. இந்த மாவட்டத்திலே விவசாயத்திலே நம்பிக்கை கொண்டிருக்கின்ற இப்பகுதி மக்களுக்கு கிடைத்திருக்கின்ற மாபெரும் பெற்றியாகும். இப்பாலம் அமைக்கப்படுவதானது அரசியல் வெற்றியல்ல இது இப்பகுதிவாழ் விவசாய சமூகம் பெற்றிருக்கின்ற வெற்றியாகும். இவ்வாறான செயற்றிட்டங்கள் இந்த மாவட்டத்தில் இனிமேல் அதிகமதிகம் நடைபெறும்.

மண்டூர் ஓடத்துறையில் படகுமூலம் பயனம் செய்யும்போது பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இவ்விடையத்திற்கு முற்றுப் பள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக வேண்டி இன்று 1400 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப்பாலத்திற்காக அடிக்கல் நடப்பட்டுள்ளது.

எனவே அனைவரும் நல்லதாகவே நினைத்து, நல்லதாகப்பேசி நல்லதாக எழுதி நல்லதாக பிரார்த்தனை செயவது நல்லது எங்கு நடந்தாலும் எமது கைகளை உயர்த்தி எமது ஆதரவுகளை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: