17 Oct 2017

பாடசாலை வரலாற்றில் இதுவே முதற்தடவை.

SHARE

அண்மையிலே ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகி இருந்தது. இதில் பல பாடசாலைகளில் முதற்தடவையாக சித்தியடைந்து பாடசாலை வரலாறுகளில் மைல்கல்லாக பதிவு செய்துள்ளனர். அவ்வாறான ஒரு வரலாற்றுப்பதிவு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கோட்டத்திற்குட்பட்ட இளைஞர் விவசாய திட்ட வெள்ளிமலை ... பாடசாலையில் பதிவாகி உள்ளது. இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனான நேசதுரை வாணுஜன் 154 புள்ளிகளை பெற்று இச்சாதனையை இவ்வூரில் பதிவு செய்துள்ளார். பாடசாலை ஆரம்பித்து 14 வருடங்களுக்கு மேலாகியும் இம்முறை இம்மாணவன் சித்தியடைந்தமையானது எதிர்வரும் காலங்களில் தக்க வைக்ககப்படுமா? என்பது சந்தேகம். காரணம் இப்பாடசாலை அதிகஸ்ரப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. போதிய ஆளணி மற்றும் பௌதீக வளங்கள் அற்ற நிலையில் இப்பாடசாலை இயங்கி வருகின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: