23 Oct 2017

“மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே நூல்கள்” வாழைச்சேனை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத கவர்ச்சித் தொனிப்பொருள்

SHARE
“மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே நூல்கள்”
வாழைச்சேனை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத கவர்ச்சித் தொனிப்பொருள்
“மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே நூல்கள்”என்ற தொனி;பொருளில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை மட்டக்களப்பு - கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் வாழைச்சேனை பொது நூலகம் நடாத்தியது.
அந்த நூலகத்தைப் பயன்படுத்தும் வாசகர்களின் நன்மை கருதி பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் ஒரு கட்டமாக கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கும்புறுமூலை வெம்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்களுக்கான நடமாடும் நூலக சேவை நடாத்தப்பட்டது.
இதன்போது சபையின் செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன், நூலக உத்தியோகஸ்த்தர எம். ஸ்ரீதர், நிர்வாக உத்தியோகஸ்த்தர் கமலா சபேசன் உள்ளிட்ட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: