மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியையும், எழுவாங்கரைப் பகுதியையும் இணைக்கும் மற்றுமொரு ஓடத்துறையாகக் காணப்படுவது மண்டூர் - குருமண்வெளி படகு மூலமான போக்குவரத்தாகும். இலங்கையின் இரண்டாவது மிக நீளமான நதியாகக் காணப்படும் மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து இப்படகுப் போக்குவரத்து மார்க்கம் மிக நீண்டகாலமாக இருந்து இடம்பெற்று வருகின்றது.
அப்பகுதிவாழ் பொதுமக்களினதும், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளினதும் அயராத முயற்சியின் பயனாக 1400 மில்லின் ரூபா நிதியொதுக்கீட்டில், இதற்கு பாலம் அமைப்பதற்கான அடிக்கல் சனிக்கிழமை (14) பிற்பகல் நட்டு வைக்கப்பட்டது.
இதன்போது உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சிரேஸ்ட சட்டத்தரணி லக்ஸமன் கிரியல்ல, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், அலிசாகிர் மௌலானா, முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கியதேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி, கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment