15 Oct 2017

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக மயில்வாகனம் சிறிதரன் நியமனம்.

SHARE
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக வவுணதீவு கன்னங்குடாவைச் சேர்ந்த மயில்வாகனம் சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை (12) இரவு ஜனாதிபதி மாழிகையில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பானர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்விலே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவருக்கான நியமனக் கடித்தை வழங்கி வைத்துள்ளார்.
மயில்வாகனம் சிறிதரன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் இளைஞர்களுக்கான தேசிய அமைப்பாளரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மிக நெருக்கமாக இருந்து செயற்பட்டு வருகின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 


SHARE

Author: verified_user

0 Comments: