மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச் சபையின் ஏற்பாட்டில் சர்வதேச கூட்டுறவுதின விழா எதிர்வரும் 17ஆம் திகதி காலை 09.00 மணிக்கு மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள தேவநாயகம் மண்டப கூட்டுறவு கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
மாவட்ட கூட்டுறவுச் சபையின் தலைவர் ஆர்.இராயப்பு தலமையில் நடைபெறவுள்ள இந்தநிகழ்விற்கு கூட்டறவு அமைச்சின் செயலாளர், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் தேசிய கூட்டுறவுச் சபையின் தலைவர் ஆகியோர் அதிதிகளாக கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் கனிஸ்ர சிரேஸ்ர பிரிவுகளில் பேச்சுகட்டுரைசித்திரம் ஆகியபோட்டிகளில் பங்குபற்றிமுதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டபாடசாலைமாணவர்களுக்குபரிசில்கள் வழங்கப்படுவதுடன் போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பங்குபற்றியமைக்காக சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் மாவட்ட கூட்டறவுச் சபையில் அங்கம் வகிக்கின்ற பலநோக்கு சிக்கன பாற்பண்ணை கூட்டுறவுச் சங்கங்களில் சிறந்து சேவையாற்றுகின்ற சங்கங்கள் அன்றைய நிகழ்வில் கௌரவிக்கப்பட இருப்பதாக மாவட்ட கூட்டுறவுச் சபையின் தலைவர் ஆர்.இராயப்பு தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment