25 Oct 2017

உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் புற்று நோய் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு

SHARE
 பெண்கள் தாய்மை அடைகின்ற போதும் அதற்கு முன்னரும் ஏற்படக்கூடிய கருப்பை புற்று நோய் மற்றும் மார்பகப் புற்று நோயின் தாக்கத்தினை முன் கூட்டியே குறைப்பதற்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை பாடசாலையிலிருந்து ஆரம்பிக்கும் செயற்பாட்டினை நாடு பூராகவும் ஆரம்பித்துள்ள நிலையில் அதன் ஒர் அங்கமாக சுகாதார அமைச்சின்
செயற்பாடுகள் மற்றும் புற்று நோயின் தாக்கங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு தெளிவூட்டும் விழிர்ப்புணர்வு நிகழ்வு பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் சி.பேரின்பராசா தலைமையில் நடைபெற்றது.


நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஸ்ணகுமார் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் என்.வேணிதரன் ஆகியோர் கலந்து கொண்டு புற்று நோய்கள் தொடர்பான விளக்கங்களை தெளிவு படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: