2 Oct 2017

ஏறாவூரின் முன்னாள் அரசியல் பிரமுகர் மரணம்

SHARE
ஏறாவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அரசியல் பிரமுகரும் ஓய்வு பெற்ற அதிபருமான அலி முஹம்மத் முஹம்மத் ஜெமீல் தனது 82வது வயதில் ஞாயிற்றுக்கிழமை 01.10.2017 அதிகாலை மரணமானார்
சிறிது காலம் சுகவீனமடைந்திருந்த அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.
இவர் தற்போதைய ஏறாவூர் நகர சபை, பிரதேச சபையாக இருக்கும்போது அதன் தவிசாளராகவும் அதிபராகவும், அரசியல் மேடைகளில் பீரங்கிப் பேச்சாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: