27 Oct 2017

காத்தான்குடி சம்மேளனத்தினால் மட்டக்களப்பில் உள்ளுராட்சி மன்றங்களைத் தரமுயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் தொடர்பான திட்ட வரைபு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களைத் தரமுயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் சமீபத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையின் அடிப்படையில் தமது திட்ட வரைபைச் சமர்ப்பித்துள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை புதன்கிழமை 25.10.2017 மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரனிடம் சம்மேளன உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தன்னகத்தே கொண்டுள்ள 198 பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் உறுப்பினர்களையும் உள்ளடக்கி பிரதேச அரசியல்வாதிகளினதும் துறைசார்ந்தவர்களினதும் கருத்துக்களைப் பெற்று இந்த திட்ட வரைபைச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மாவட்ட பதில் அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையின் அடிப்படையில்  அதில் குறிப்பிடப்பட்டுள்ள காத்தான்குடி நகரசபையைப் பிரித்து மாநகரசபை மற்றும் பிரதேச சபை ஒன்றை நிறுவுதல் என்ற முன்மொழிவு தொடர்பிலான கருத்துரைகள் வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கான இறுதித் தினம் புதன்கிழமையோடு (25.10.2017)  முடிவடைந்தது.
இதன் பிரகாரம், காத்தான்குடி எல்லைக்குட்பட்ட பிரதேசங்களை 

உள்ளடக்கியதாக 10 வட்டாரங்களைக் கொண்ட காத்தான்குடி மாநகர சபை ஒன்றையும், மேலும் 10 வட்டாரங்களைக் கொண்ட பிரதேச சபை ஒன்றையும், ஸ்தாபித்தல் தொடர்பாக சகல தரவுகளையும் கொண்ட திட்ட வரைபு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



SHARE

Author: verified_user

0 Comments: