27 Oct 2017

உளநலம் எனப்படுவது வெறுமனே மருந்துகளால் கட்டியமைக்கப்படுவதில்லை – உளநல வைத்திய நிபுணர் கடம்பநாதன்.

SHARE
உளநலம் எனப்படுவது வெறுமனே மருந்துகளால் கட்டியமைக்கப்டுவதில்லை குடும்பங்கள், குடும்ப உறவுகள், சூழ உள்ளவர்களின் தொடர்புகள், ஆற்றல்கள், அறிவுகள், இயங்கு தகவுகள், போன்றன உளநலத்தைத் தீர்மானிக்கின்ற பாரிய விடையங்களாக இருக்கின்றன.
என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட உள நல வைத்திய நிபுணர் தன. கடம்பநாதன் தெரிவித்துள்ளார். சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்வு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வியாழக்கிழமை (26) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொலிசார், விசேட அதிரடிப்படையினர், பிரதேச செயலக அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், தை;;தியர்கள்,  வைத்தியசாலை ஏனைய உத்தியோகஸ்த்தர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது  மேற்படி வைத்திய நிபுணர் மேலும் தெரிவிக்கையில்….

நாங்கள் பல்வேறுபட்ட சவால்களுக்குள் வாழ்ந்து கொண்டிரு;ககின்றோம், மிகவும் பாரிய பிரச்சனைக்கு முகம் கொடுத்த ஒரு சமூகம் இன்றும் வாழந்து கொண்டிருப்பதாக இருந்தால், அதற்குரிய காரணம் எங்களுக்குள் இருக்கின்ற இயலுமைகளும்தான் காரணமாகும். வெறுமனே வெளியிடங்களிலிருந்து வரும் உதவிகளினால் மாத்திரம் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. எங்களுக்குள் இருக்கும் இயலுமைகளாலும் நாம் வாழ்கின்றோம். ஆனால் இதனை நாகரீகம் என்ற போர்வையில் அவற்றைத் தொலைத்துவிடக் கூடாது. நாகரீகம் முக்கியமானதுதான் ஆனால் நாகரீகத்துக்குள் நாங்கள் எங்களைத் தெலைத்துவிடுவோமானால் எங்களது அடையாளங்கள் முக்கியமானது, பின்னர் இன்னுமொருவரிடத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

நாம் ஒவ்வாருவருக்குள்ளும் இருக்கின்ற பிரச்சனைகளை அறிந்திருக்கின்ற அளவிற்கு தனிநபரோ, குடும்பம் சார்பாகவோ, சமூகம் சார்பாகவோ, உள்ள இயலுமைகளையும் தேடவேண்டியுள்ளது. பல பிரச்சனைகளையும் தாண்டி மீண்டெழும் தன்மையினால்தான் இஸ்ரேல் எனும் நாடு தற்போது வல்லரசைக்கூட கேள்வி கேட்டும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றது. எனவே நாம் பிரச்சனைகளையும், அசௌகரியங்களையும், அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே அசௌகரியங்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய ஆற்றல்களை நாம் வளர்த்துக் கொள்ளக்கூடியவர்களாக இருக்கவேண்டும்.

உலகளவில் கூடியளவு உதவிகள் அளிக்கப்படும் வைத்திய நிபுணர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் உளநல வைத்திய நிபுணர்கள்தான். எனவே நாம் பல்வேறுபட்ட அழுத்தங்களுக்குள் வாழ வேண்டிய தேவை இருக்கின்றது. தற்போது விசாயத்தில் அடிப்படையில் இருக்கின்ற விடையங்களை மறக்கச் செய்துவிட்டு விற்பனை உத்திகளைப் புகுதித்திவிட்டு மீண்டும் நாம் முதலாவது புள்ளியில் வந்து நிற்கின்றோம். இது விவசாயத்துறைக்கு பாரிய பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் எமது மனங்களில் இது பாரிய பிரச்சனையாக இருந்து எதற்குள்ளும் நாம் மருந்துகளுக்கு அடிமைப்பட்டதாக மாறிவிடுவோம். 

அடையாளம் காணப்பட்ட நோய்களுக்கு மருந்துகள் தேவை ஆனால் பிரச்சனைகளை மற்றும் அசௌகரியங்களை, நோய் எனக் கருதி மருந்துகள் பெறுவோமாக இருந்தால் அது போதைகளுக்கு அடிமையாகின்ற நிலமைபோன்றதாகத்தான் வரும்.  எங்களைக் கஸ்ற்றப்படுத்துகின்ற விடையங்கள் அனைத்திற்கும் நாம் மருந்துகள் எடுப்போமாக இருந்தால் நாம் வாழ்க்கை முழுவதும் மருந்துகளுக்குள்தான் வாழ வேண்டி ஏற்படும்.

உளநலம் எனப்படுவது வெறுமனே மருந்துகளால் கட்டியமைக்கப்டுவதில்லை குடும்பங்கள், குடும்ப உறவுகள், சூழ உள்ளவர்களின் தொடர்புகள், ஆற்றல்கள், அறிவுகள், இயங்கு தகவுகள், போன்றன உளநலத்தைத் தீர்மானிக்கின்ற பாரிய விடையங்களாக இருக்கின்றன. பொதுவாக உளநலத் துறையில் இருப்பவர்கள், ஒப்பீட்டளவில் அழுத்தங்கள் குறைந்தவர்களாக இருப்பதற்கான காரணம் தங்களிடம் வருபவர்களின் பிரச்சனைகளை மாத்திரம் கேட்காமல் அவர்களுக்கான தீர்வுகளையும் பெறுவதற்கான வழிகாட்டிய சந்தோசமும் கிடைப்பதானாலாகும் என அவர் தெரிவித்தார்.



















SHARE

Author: verified_user

0 Comments: