மர்மமான முறையில் மரணமடைந்த கிராம சேவை உத்தியோகஸ்த்தர் சோமசுந்தம் விக்னேஸ்வரனின் உடலை மீள் பரிசோதனை நடாத்துவதற்கு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் எனும் கிராமத்தில் கிராமசேவை உத்தியோகஸ்த்தராக கடமையாற்றி வந்த நிலையில் கடந்த 2016.04.15 ஆம் திகதி அன்று எருவில் கிராமத்தில் வைத்து மர்மமான முறையில் மரணமடைந்திருந்தார். குறித்த மரணம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2017.09.28 அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது மரணமடைந்த கிராம சேவை உத்தியோகஸ்த்தர் சார்பாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் சந்திரமணி ஆஜராகியிருந்தார். இதன்போது அவர் குறித்த மரணம் தொடர்பில் உண்மை நிலையைக் கண்டறிவதற்கு பிரேதத்தை மீழ் பரிசோதனை நடாத்துவதற்கான அனுமதியினை வழங்குமாறு நீதிமன்றிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரேதத்தைத் தோண்டி எடுத்து மீழ் பரிசோதனை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிணங்க செவ்வாய் கிழமை (31) களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி, சட்ட வைத்திய அதிகாரி இனோக்கா,
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் சந்திரமணி, உள்ளிட்டோர் முன்னினையில் பிரேதம் தோண்டி எடுக்கப்படது.
குறத்த்த கிராம சேவை உத்தியோகஸ்த்தரின் பிரேதம் தொடர்பில் மேலதிக பரசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பப் படுகின்றது. இந்த பரிசோதனையை பிரதம சட்ட வைத்திய நிபுணர் அஜித் தென்னக்கோண் மேற்கொள்ளவுள்ளார். பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னர் மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகள் தொடரும் என முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் சந்திரமணி, இதன்போது தெரிவித்தார்.
எனது சகோதரனின் மரணம் தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதற்குத் தீரு;வுகாணும் வகையில் இன்று எனது சகோதரனின் பிரேதம் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பப் படுகின்றது. இதன்மூலம் எனது சகோதரனின் மரணத்திற்குரிய நீதியும் நியாயமும் கிடக்கும் என எதிர்பார்க்கின்றோம் என உயிரிழந்த கிராம சேவை உத்தியோகஸ்த்தரான சோமசுந்தம் விக்னேஸ்வரனின அண்ணாவான சோமசுந்தரம் கமல் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment