8 Oct 2017

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் 9 வது இடத்தைப் பிடித்த மட்.திக்கோடை கணேச மகாவித்தியாலய மாணவி விபுணா.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள திக்கோடைக் கிராமம் ஓர் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளதாகும். மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் இக்கிராமத்தில் உள்ள கணேச மகாவித்தியாலயத்திலிருந்து இவ்வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் கோமதி கதிரவன் ஆகியோரின் மகள் விபுணா 186 புள்ளிக்ளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 வது இடத்தையும், பட்டிருப்புக் கல்வி வலயத்தில் 2 வது இடத்தையும், போரதீவுப் கல்விக் கோட்டத்தில் முதலிடத்தையும் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார்.
மட்.திக்கோடை கணேச மகாவித்தியாலய அதிபர் சி.தவநிதியின் நெறிப்படுத்தலின் கீழ் அ.சாந்தினி என்ற வகுப்பாசிரியரின் சீறிய கற்பித்தலினூடாக இம்மாணவி இந்த அடைவு மட்டத்தை எட்டியுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள இதுபோன்ற எல்லைப் புறங்களில் காணப்படும் பல பாடசாலைகள் முன்னெப்போதும் இல்லத வகையில் தற்போது கல்வியில் படிப்படியான பரிணாம வளர்ச்சியை எட்டிவருவதாக அப்பகுதி கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் தூர இடங்களிலிருந்து பல சிரமங்களைனயும் கருத்தில் கொள்ளாமல் இப்பகுதி மாணவர்களுக்கு கல்வியை ஊட்டிவரும் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு நன்றியையுமு; பாராட்டுக்களையும் வழங்குவதாகவும் போரீவுப்பற்று பிரதேச கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.



SHARE

Author: verified_user

0 Comments: