8 Oct 2017

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ,காணாமற்போனோர் அலுவலகம் சம்பந்தமாக கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு.

SHARE
இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடவியலாளர்களுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாகவும்,காணாமற்போன அலுவலகம் சம்பந்தமாகவும் இரண்டுநாள் வதிவிடச் செயலமர்வு சனி,ஞாயிறு(7,8, -10.2017) தினங்களில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதயத்தில் இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் பணிப்பாளர் பீ.சச்சிவானந்தம் தலைமையில்  காலை முதல் மாலை(8.30-4.30)வரை நடைபெற்றது.
இச்செயலமர்வில் வளவாளர்களாக  ஐக்கியநாடுகள் மனித உரிமை செயற்பாட்டு நிறுவகத்தின் செயற்பாட்டாளர் றுக்கி பெர்ணாட்டோ,சட்டத்தரணி திருமதி. மங்களேஸ்வரி சங்கர் ஆகியோர்கள் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக ஐக்கியநாடுகள் சபையின் அறிக்கையுடன் தெளிவூட்டப்பட்டன.

இந்நிகழ்வில் அகம் அமைப்பின் திட்டமுகாமையாளர் கே.லவகுசராசா,கிழக்கு மாகாண ஊடகவியாளர் சம்மேளனத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் மற்றும் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலையைச் சேர்ந்த நாற்பது ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது வலிந்து காணமற் ஆக்கப்பட்டோர் விடயங்கள்,காணமற் ஆக்கப்பட்டோர் தொடர்பான சட்டங்கள்,அவர்களுக்கு குரல்கொடுத்து பாதுகாக்கும் நிறுவனங்கள்,

ஐக்கியநாடுகளின் பொறிமுறை விடயங்கள்,மனித உரிமை விடயங்கள், காணமற் ஆக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கள்,தீர்வுகள்,காணாமற் ஆக்கப்பட்டோருக்கான .நா பணிக்குழுவின் சேவைகள்,ஐக்கியநாடுகள் சபையின் தராதரங்கள்,எதிர்காலத்தில் வலிந்து காணாமற் ஆக்கப்படுவோரை இனங்காணுதல்,தடுத்தல் விடயங்கள்,மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கடமைகள்,நாடளாவிய ரீதியில் காணாமற்போனோர் அலுவலகங்களை அமைத்து நாட்டினை பாதுகாத்தல் விடயங்கள் போன்றன இச்செயலமர்வில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user

0 Comments: