3 Oct 2017

கடந்த 3 மாதங்களாக ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் இடம்பெறவில்லை

SHARE
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் இவ்வாண்டின் ஜுலை மாதத்திற்குப் பின்னர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இடம்பெறவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதேச செயலகத்தில் இடம்பெறும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பாண்டில் மக்கள் பிரதிநிகளின் நிதி ஒதுக்கீடுகள், மத்திய, மாகாண அரசாங்க அபிவிருத்தித் திட்டங்களின் அமுலாக்கத்திற்காக ஒதுக்கப்படுகின்ற நிதியொதுக்கீடுகள் மற்றும் இன்னபிற பிரதேச அபிவிருத்தி தொடர்பான விடயங்கள், முன்னேற்றங்கள் பின்னடைவுகள் நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் ஆராயப்படுவது வழமையாகும்.
இதேவேளை 5 மாதங்களாக பிரதேச செயலாளர் இன்றி ஏறாவூர் நகர பிரதேச செயலகம் இயங்கி வருகின்றது.

இங்கு பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த எஸ்.எல். முஹம்மத் ஹனீபா கடந்த ஜுன் மாதம் தொடக்கம் சம்மாந்துறைக்கு பிரதேச செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளருக்கான வெற்றிடம் நிரப்பப்படாமல் இருந்து வருகின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: