மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள போரதீவுப்பற்றுக் கல்விக் கோட்டதிற்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்திலிருந்த 2 ஒலிபெருக்கி சாதனங்கள் சனிக்கிழமை (21) இரவு களவாடப்பட்டுள்ளதாக வித்தியாலய அதிபர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
பாடசாலையில் இவ்வசம்பாவிதச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதை அறித்த அதிபர் பாடசாலைக்கு ஞாயிற்றுக் கிழமை (22) உடன் சென்று நிலமையினை அவதானித்த பின்னர் வெல்லாவெளி பொலிசில் ஞாயிற்றுக் கிழi முறைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாடசாலையிலிருந்த 2 ஒலிபெருக்கிச் சாதனங்களும் காணாமல் போயுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment