10 Sept 2017

புகையிரக் கடவையில் படி ரக பேக்கரி வாகனம் ஓயில் புகையிரதத்துடன் மோதி கோர விபத்து இருவர் படுகாயம்

SHARE
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவாபுரம் புகையிரத நிலையம் அருகில் புகையிரக் கடவையில் சனிக்கிழமை காலை 7.20 மணியளவில் படி ரக பேக்கரி வாகனம் ஓயில் புகையிரதத்துடன் மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் பேக்கரி பொருட்களை விற்பனை செய்யும் டிமோ இலகு வாகனம் பொலொன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒயில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் புகையிரதத்தில் மோதுண்டுள்ளது,

சம்பவத்தில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற பேக்கரி உரிமையாளரான தம்பிராசா சிவநேசன் (வயது 60) என்பவரும் அவருக்கு உதவியாளராகச் சென்ற சித்தாண்டியைச் சேர்ந்த எஸ். நிரோஷன் (வயது 18)‪ என்பவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இடம்பெறும்போது தேவபுரம் கடவையில் காவலாளிகள் எவரும் கடமையில் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.







SHARE

Author: verified_user

0 Comments: