மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையில் தேத்தாத்தீவுக்கும் களுதாவளைக்கும் இடைப்பட்ட பகுதியில் சனிக்கிழமை 09.09.2017 காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இ.போ.ச பஸ்ஸ{டன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் 2 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த கல்முனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டபொழுது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த 2 இளைஞர்கள் பஸ்ஸின் பின்புறம் போய் மோதியதில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.
காத்தான்குடி டீன் வீதியைச் சேர்ந்த 2 இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதமடைந்துள்ளன.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment