21 Sept 2017

அற்ப அரசியலுக்காக ஆதாரமில்லாமல் பேசி சமூகங்களின் இயல்பு நிலையைக் குழப்ப வேண்டாம் கிழக்கு முதலமைச்சர்

SHARE
அற்ப அரசியல் இலாபங்களுக்காக ஆதாரமில்லாமல் பேசி சமூகங்களின் இயல்பு நிலையைக் குழப்பும் மத்திய மற்றும் மாகாண அரசியல்வாதிகளிடம் இருக்கின்றது. இது ஒரு துரோகச் செயலும் நயவஞ்சகமுமாகும்  என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தின் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூரில் வியாழக்கிழமை 21.09.2017 கல்வி, பொது வசதிகள் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்கான உதவிகளை வழங்கி வைத்தபின் அவர் உரையாற்றினார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்திலே சிதறுண்டு கிடந்த நிருவாகத்தையும், சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வுக் கட்டமைப்பையும் நாம் எமது குறுகிய இரண்டரை வருட கால மாகாண ஆட்சியின் கீழ் வெகு பிரயத்தனத்தின் மூலம் படிப்படியாக முன்னேற்றம் அடையச் செய்துள்ளோம்.

இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கிடையில் இப்பொழுது சந்தேகம் அற்றுப் போயுள்ளது.

ஆயினும், இதனை ஜீரணித்துக் கொள்ள முடியாத மத்திய மற்றும் மாகாண அரசியல்வாதிகள் ஒரு சிலர் தமது சிறுமைத் தனத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

ஆதாரமில்லாமல் வம்பளப்பதே அவர்களது வாடிக்கையாகி விட்டது. இந்தப் போக்கை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில். இனிமேலும் இத்தகைய அரசியல்வாதிகளின் உளறல்களை கேட்டு அதனை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. பொதுமக்கள் எவ்வளவோ புரிந்துணர்வுடன் மாறி விட்டார்கள். ஆனால், இந்த அரசியல்வாதிகள் தமது போக்கை சற்றேனும் மாற்றிக் கொள்வதாக இல்லை.
நாம் அபிவிருத்தி தொடக்கம், அதிகாரப் பங்களிப்பு வரை எந்தவொரு விடயத்திலும் இன மத மொழி பிரதேச கட்சி வேறுபாடுகள் காட்டியதில்லை.
நமது மாகாண நிருவாகத்தின் நிதிப் பங்கீடுகள், உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள், சமூக சேவைப் பணிகள், வாழ்வாதாரத் திட்டங்கள், வேலை வாய்ப்புக்கள், வளப் பங்கீடுகள், பதவி உயர்வுகள் என்று எதனை எடுத்துக் கொண்டாலும் எல்லாவற்றிலும் எந்தவித பாரபட்சமும் காட்டவில்லை என்பதை ஆதாரத்தோடு ஆவணங்களாக வைத்திருக்கின்றோம்.

ஆனால், வெட்டிப் பேச்சுப் பேசி சமூகங்களைக் குழப்பும் கீழ்த்தரமான பண்பாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் மீள் பரிசீலனை செய்து சமகாலப் போக்குக்கு மாற வேண்டும்.

இலஞ்சம், ஊழல், இனத்துவேசம் போன்றவை எமது மாகாண நிருவாக ஆட்சியின் கீழ் ஒரு போதும் இருந்ததில்லை. அதனால்தான் அச்சமின்றி எதிரும் புதிருமாக இருந்த எல்லாக் கட்சிகளையும் எல்லா இனங்களையும் இணைத்து ஆட்சி செய்ய முடிந்தது.” என்றார்.



SHARE

Author: verified_user

0 Comments: