21 Sept 2017

அனர்த்தங்கள் நிகழ்கின்ற வேளையில் சிகிச்சையளிக்க களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தயாராக இருக்கின்றது.

SHARE
அனர்த்தங்கள் நிகழ்கின்ற வேளையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற அனைத்து நோயாளர்களுக்கும் சிகிச்சையளிக்க களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தயாராக இருக்கின்றது. என அவ் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகள் கு.சுகுணன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெறும் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பில் வியாழக்கிழமை (21) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்…

அனர்த்தம் என்பது எதிர்பாராத சந்தர்பப்ங்களில் எந்த இடத்திலும், எந்த வித்திலும் நடந்துவிட முடியும், அந்த வகையில் இப்பிரதேசத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்டு, அல்லது, வேறு விதங்களில் விபத்துக்குள்ளாகி காயமுற்று எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகக் காணப்படுகின்றது.

இவற்குக்கு இணங்க இப்பிரதேசத்தில் அனர்த்தம் ஒன்று இடம்பெறுமாக இருந்தால் அதில் காயமுற்றவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும், வைத்தியசாலையில் அவர்களை எவ்வாறு முகாமைத்துவம் செய்யவேண்டும், எப்படி சிகிக்சைகள் வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் புதன்கிழமை ((20) களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் ஒத்திகை நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

ஒரே நேரத்தில் அதிகளவு நோயாளர்கள் இவ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது, அதனை எவ்வாறு முகாமை செய்வது என்ற பல விடையங்களை ஒத்திகை மூலம் செயற்படுத்திப் பார்க்கக் கூடியதாக இருந்தது. எனவே அனர்தங்கள் நிகழ்கின்ற வேளையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற அனைத்து நோயாளர்களுக்கும் சிகிச்சையளிக்க களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தயாராக இருக்கின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: