மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை (28) பிற்பகல் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வர்ன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், பிரதேச செயலாளர் திருமதி.வி.சிவப்பிரியா, மற்றும் ஏனைய திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும், பிரதேச சபையின் செயற்பாடுகள், சுகாதாரத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மீன்பிடித் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், வீதி அபிவிருத்தி, விவசயாம், மதுவரித்திணைக்களம் உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும் கிருமிநாசினிகளின் பாவனைகளைக் குறைக்கும் முகமாகவும், தொழிலை மேம்படுத்தும் முகமாகவும், வெற்றிலைச் செய்கையாளர்கள் பிரதேச சபையில் பதிவு ஒன்றை மேற்கொள்ளல், புதிதாக மதுபான நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படக்கூடாது உள்ளிட்ட பல தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment