30 Sept 2017

அரச சேவையிலே தோற்றுப்போன ஒரு மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பார்க்கின்றேன். - மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி . பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

SHARE
விமர்சனங்கள் செய்கின்றவர்களையும், செய்யப்படுகின்றவர்களையும் பாதிக்கின்ற விடயம் அந்தவகையில் என்னுடைய அரச சேவையிலே தோற்றுப்போன ஒரு மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பார்க்கின்றேன்
என்று சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பதவி உயர்வு பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி . பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

வியாழக்கிழமை மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

என்னைப் பொறுத்தவரையில் இடமாற்றங்களையும், பதவி உயர்வுகளையும் நானாக விரும்பிக் கேட்பதில்லை, அதே போன்று அவற்றினை ஏற்றுக் கொள்வதுதான் என்னுடைய வழக்கம். அவற்றினைப் பிந்திப் போடுவதற்கும் மாற்றுவதற்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் அதற்காக இம்மியளவும் முயற்சிப்பதில்லை. அந்தவகையில் என்னுடைய கடமைகளை இருக்குமு; வரையில் சரிகாகச் செய்திருக்கின்றேன். ஏறக்குறைய ஒன்றரை வருடங்களாக  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகின்ற திட்டங்கள் எந்தவொரு பொறுப்புக்களின் மாற்றங்களாலோ, சூழ்நிலை மாற்றங்ககளாலோ ஒருபோதும் இடைநடுவில் நிறுத்தப்படக்கூடாது என்ற வகையில் அவற்றை வடிவமைத்திருக்கிறேன்.

மாவட்டத்திற்கு நான் வருகையில் பெரும் சவாலாக இருந்த விடயம் அனர்த்த செயற்பாடு. எனவே நிதி அமைச்சுடனும், உரலக வங்கியுடனும் உத்தியோக பூர்வமாகப் பேசும் போது கூறிய விடயம், அனர்த்தங்களின் போது மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குகின்ற செயற்பாட்டைக் கைவிட்டு நிரந்தரமாக தப்பிப்பதற்கான  வழிவகைகளைக் கண்டறியவேண்டும் என்று. அதன் தொடர்சிசயாகத்தான் பல நீர்ப்பாசனக்குளங்களைப் புனரமைத்திருக்கிறோம். முக்கிய நீர்ப்பாசனக்கால்வாய்களை புனரமைத்திருக்கிறோம். அதே போன்று வாவிகளைச் சுற்றி எல்லைகள் அமைத்திருக்கிறோம்.  மாவட்டத்தின் பெரும்பாலான தோணாக்களைப் புனரமைத்து வாவியுடனும், கடலுடனும்இணைத்திருக்கிறோம். மிகமுக்கியமான திட்டங்கள், காலநிலை மாற்றத்திற்கான திட்டம் 1300 மில்லியனுக்கான திட்டம். நான் திறைசேரியில் ஆணித்தரமாக கலந்துரையாடியதன் அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. அடுத்து 800 மில்லியனில் நீர்ப்பாசனத்திணைக்களம் திட்டத்தினை மேற்கொள்கிறது. 130 மில்லியனில் கோட்டைமுனைப்பாலம் அமைக்கப்படுகிறது.

அதே போன்று கிறிப் 2 திட்டம் மட்டக்களப்புக்குக்  கிடைப்பதாக இருக்கவில்லை.  இலங்கையில் 9 நீர்த்தேக்கங்களை உலக வங்கி ஆய்வு செய்திருந்தது. அதில் இரண்டு நீர்த்தேக்கங்கள் திட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. களனி ஆறு, முந்தனை ஆறு ஆகியன. முந்தனை ஆறு பாரியதொரு திட்டம். அதில் முதலாவது ஆய்வுகள் நிறைவடைந்து பங்குதாரர்களுக்கான கூட்டம் நடத்தப்படுவதற்கான வேலைகள் நடைபெற்றிருக்கின்றன. அதில் 145 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகிறது. நான் எதிர்பார்க்கிறேன் அதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 80 வீதமான குடிநீர்ப்பிரச்சினை, வரட்சி, வெள்ளம், விவசாயப்பிரச்சினை உட்பட அனைத்துப்பிரச்சினைகளும் தீர்க்கப்படும். அடுத்ததாக கித்துள் றுகம் குளங்களின் இணைப்பு. அதற்கான நடவடிக்கைகள் பிரான்ஸ் நிறுவனத்திடம் வழங்களப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஒக்ரோபர் மாதமளவில் அத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

அதேபோல உலக வங்கியூடாக பெற்றுக் கொண்ட நகரத்திட்டமிடல் மெட்ரோ சிற்றித்திட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட நிதி. அவற்றுக்கான வேலைகளை மேற்கொள்ளும் படி கேட்டிருந்தேன். அதில் ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர், வவுணதீவு, செங்கலடி ஆகிய பிரதேசங்களில் திட்டங்களன் மூலம் திட்டமிடப்பட்ட நகர அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதில் முதல் கட்டத்தில் உலக வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொலர்டகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.


அதே போன்று தேசிய நல்லிணக்க அமைச்சிடம் அனுப்பப்பட்ட பிரேரணைகளில் அத்தனை பாலங்களும் 8000 மில்லியன்களை அமைச்சரவை அனுமதித்திருக்கிறது. நேற்றைய தினம் அத்தனை இடம்பெயர்ந்த மக்கள் அனைவருக்குமான வீடுகள் அமைப்பதற்கான ஒரு வீட்டுக்கு ஒரு மில்லியன் என்ற வகையில் 6500 வீடுகளுக்கான அனுமதி அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏறக்குறைய 15ஆயிரம் மில்லியன் ரூபாய்களுக்கான அனுமதிகள் கிடைத்துள்ளன. அடுத்ததாக 700 மில்லியன் ரூபா செலவில் கிராமப்புறங்களில் காபற் வீதிகள் அமைப்பதற்கான அனுமதியுமு; கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே அத்தனை அங்கீகாரங்களும் வழங்கப்பட்டு அந்த அந்தத் திணைக்களங்களுக்கு பணிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இத்திட்டங்களில் எந்தவிதமான தடங்கலும் ஏற்படாது என்பது என்னுடைய கருத்து.
SHARE

Author: verified_user

0 Comments: