மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சல்லித் தீவில் 25 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட “இயற்கை பல்வகைப் பாதுகாப்புடனான ரம்மியமான மகிழ்ச்சி மிக்க ஓய்வுப்பிரதேசம்” வியாழக் கிழமை (28) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவில், மட்டக்களப்பு மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களன ஏ.சுதர்சன், எஸ்.முரளிதரன், ஏ.சுதாகரன், கோரளைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் எஸ்.இந்திரகுமார், மத்திய கட்டங்கள் திணைக்கள பொறியியலாளர்களான வை.கிலக்சன், எம்.டினேசன் உள்ளிட்டோரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
சுற்றுலாத்துறை அபிவிருத்திக் கருத்திட்டம் 2017இன் கீழ் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மத்திய கட்டடங்கள் திணைக்களத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குளியலறை, சமையலறை வசதியுடன் கூடிய இரண்டு தொகுதிகளாக 4 அறைகளையுடைய கைபிரிற் வீட்டுத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 8 பேர் தங்கி ஓய்வைக் கழிக்கமுடியும். அத்துடன், சல்லித்தீவினைச் சுற்றிய பிரதேசத்தில் சூரிய மின்கலம் மூலம் ஒளியூட்டப்பட்டுள்ளதுடன், உல்லாசப்பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் படகுச்சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
படகுச்சேவையானது உல்லாசப்பிரயாணிகள் தீவினைச் சுற்றிப் பார்க்கக்கூடியதாக இருக்கும். பறவைகள் தங்கிச் செல்லும் இயற்கைச்சரணாலயமாக இத் தீவு விளங்குகிறது. அதே நேரம், வர்ண மீன்கள், முருகைக்கற்களால் நிறைந்த மிக ரம்மியமான பகுதியாக சல்லித் தீவு காணப்படுகிறது.
சல்லித்தீவின் வனப்பு பாதிக்கப்படாத வகையில் இச் சுற்றுலா செயற்த்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கோரளைப்பற்று பிரதேச சபையுடன் அரசாங்க அதிபரால் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு பிரதேச சபைச் செயலாளர் எஸ்.இந்திரகுமாரிடமம கையளிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment