16 Sept 2017

பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்

SHARE
“பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனும் மூன்றாவது காண்பியக்கலைக் காட்சித் தொடர் வெள்ளிக்கிழமை (15) மட்டக்களப்பில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள பேர்டினன்ஸ் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை இந்த கண்காட்சி ஆரம்பமானது.

 “பெண்களுக்கும் அனைத்து மனிதர்களுக்கும்; எதிரான வன்முறைகளற்ற வாழ்வு கொண்டாடப்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி இந்த கண்காட்சி நடாத்தப்பட்டுவருகின்றது.

பொதுவாக வன்முறைகளை உருவாக்குவதில் ஊடகங்களுக்கும் கலைகளுக்கும் எவ்வளவு பங்கு இருக்கின்றதோ, அதேயளவு பங்கு வன்முறைகளற்ற வாழ்வை உருவாக்குவதிலும் இருக்கின்றது.

அத்தகைய மகிழ்வான வாழ்வை உருவாக்குவதில் ஒரு சிறு பங்கு வகிப்பதற்காக இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்கள் ஒன்றிணைந்து  “வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்”, என்ற குழுவை உருவாக்கியுள்ளனர்.

இவ் ஓவியக்கண்காட்சியில் கமலா வாசுகி, ஆர். நிர்மலவாசன், எஸ்.பி. புஷ்பகாந்தன், ப. நிறஞ்சன், கோ. மதிஸ்குமார், சி. யசோதாரினி, எம்.ரீ.எப். ருக்ஸானா, ரீ.வினோஜா, ஆ. எம். நிருபா, எஸ். தனுசியா, ஏ. லுஜிதன், ஏ. குகதீசன், ஏ. ஜதீஸ்குமார், வை. ஜகேன்   ஆகியோரின் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் சமூகத்தில் காணாமல்போனவர்கள் என்னும் பதாகையுடன் பல பெண்கள் அலைந்து திரியும் இந்தவேளையில் அவர்களே அவர்களுக்காக குரல்கொடுக்கும் நிலையிருந்துவருகின்றது.சமூகம் அவர்களுக்காக குரல்கொடுக்கும் நிலையில்லாத நிலையே இருந்துவருகின்றது.அவர்களுக்கான குரலை சமூகத்தில் இருந்தும் ஏற்படுத்தவேண்டும் என்பதையும் இந்த கண்காட்சி மூலம் ஏற்படுத்தியுள்ளதாக ஓவியர் வை. ஜகேன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமான இந்த கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெறவுள்ளது.இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த கண்காட்சியில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், பேரசிரியர் சி.மௌனகுரு,பேரசிரியர் சித்திரலேகா மௌனகுரு உட்பட செயற்பாட்டாளர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,ஓவியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

























SHARE

Author: verified_user

0 Comments: