22 Sept 2017

சமாதானத்தை இந்நாட்டில் மீண்டும் உருவாக்கி நாட்டை மீளக் கட்டியெழுப்புவதிலே இந்த அரசாங்கத்தோடு நான் உறுதியாக உள்ளேன் - மட்டக்களப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

SHARE
இன ஒற்றுமை சமாதானத்தையும் இந்த நாட்டிலே மீண்டும் உருவாக்கி இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவதிலே இந்த அரசாங்கத்தோடு நான் உறுதியாக உள்ளேன். என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க  தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள குளுவினமடு கிராமத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற சுயதொழில் உற்பத்தித் தொழிலாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்களும் ஆடு வளர்ப்பு பயனாளிகளுக்கு ஆடுகளும் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண மக்கள் அவர்களது உயிர்களும் உடமைகளும், அவர்களது வளங்களும் எந்தளவு அழிந்திருக்கின்றது என்பதை நான் அறிவேன்.

தற்போது அரசு தீர்மானித்திருக்கின்றது, உட்கட்டமைப்பு ரீதியாகவும், மனிதவள வாழ்வாதார ரீதியாவும் மக்களை கட்டியெழுப்ப வேண்டும் என்று. இதில் தற்போதய அரசாங்கம் உறுதியாக உள்ளது.

இப்போது நாங்கள் உங்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் சில முயற்சிகளை செய்து வருகின்றோம்.
இந் நாட்டில் தொடர்ந்தும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ்வதற்கும் ஒற்றுமையாகம் வாழ்வதற்கு நான் இந்த அரசாங்கத்துடன் இருந்து செயற்படுவேன். என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட திட்டப் பணிப்பாதளர் ஆர்.நெடுஞ்செழியன், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக அதிகாரிகள், சர்வமத குருமார்கள், பிரதேச செயலாளர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: