எவரையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை, எவரையும் நாங்கள் உதாசீனம் செய்யவில்லை எவருடனும் நாங்கள் பேசத்தயார். எல்லோரிமமும் நாங்கள் பேசி தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய விடையங்களை ஒருமித்து நாங்கள் எடுக்க விரும்புகிறோம்.
என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன், தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கல்முனை ஜெயா திருமண மண்டபத்தில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றது.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சிக் தலைவர் மாவை.சேனாதிராசா பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்த்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் நிறைவின் பின்னர் மாலை 6 மணியளவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்…. இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்….
எமது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து மாலைவரை நடைபெற்றது. இதன்போது புதிய அரசியல்சாசனம் தொடர்பில் பிரதம மந்திரியால் இந்த மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்ககப்பட்ட இடைக்கால அறிக்கை சம்மந்தமாக எமது உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டடு கூடிய விளக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த விடையம் சம்மந்தமாக நாங்கள் தொடர்ந்து பேசுவதற்கு முடிவை எடுத்திருக்கின்றோம். பின்னரும் எமது கட்சியின் மத்திய செயற்குழு இன்னுமொரு முறைகூடி இவ்விடையங்கள் தொடர்பில் பேச சில தீர்மானங்களை எடுக்க இருக்கின்றோம்.
இவற்றுக்கிடையில் கட்சியின் முக்கியஸ்த்தர்கள், சிவில் சமூகம் போன்றோரிடமும் பேசி இந்த அரசியல் சாசனம் சம்மந்தமாக உரிய தீர்வுகளை எடுத்து கருமங்களை நிதாயமான முன்நெப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் அத்தனையும் நாங்கள் எடுப்போம்.
வேறு பல விடையங்கள் தொடர்பில் எதிர் வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தரல், மாகாண சபைத் தேர்தல், தொடர்பில் சமீபத்தில் நிறைவேற்றப் பட்டிருக்கின்ற தீர்மானங்கள், அதனுடைய விளைவுகள், தாங்கங்கள், தேர்தல் நிர்ணய சபையினுடைய கடமைகள், தொடர்பிலும், எவ்விதமாக மாகாணசபைத் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும், அவற்றை எவ்வாறு நாங்கள் அணுக வேண்டும், என்பது தொடர்பிலும் நாம் கலந்துரையாடினோம். இவ்விடையங்கள் தொடர்பிலும் எமது பேச்சுவார்த்தைகள் தொடரும், இவற்குக்கொல்லாம் மீண்டுமொருமுறை எமது மத்திய செயற்குழுகூடி எடுக்க வேண்டிய தீர்மானங்களையெல்லாம் எடுக்கும்.
அம்பாறை மாவட்டத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பிலும் எது உறுப்பினர்கள் பேசிக் கலந்துரையாடினார்கள்.
எதிர்வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவது என்பது தொடர்பில் ஏதும் முடிவுகள் எடுக்கப்பட்டதா, என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு….
அவ்விதமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை, பரிசீலகைள் எடுக்கப்டும், மக்களிடம் பேசுவோம், எமது கட்சி அங்கத்தவர்களிடமும், ஏனைய பேச வேண்டிய னைவரிடமும் பேசுவோம், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த விடையம் சம்மந்தமாக பேசும், இறுதியில் மக்களுடைய நன்மை கருத்தி எடுக்கவேண்டிய தீர்மானங்களை எடுப்போம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரசுடன் மட்டும்தான் பேச்சுவார்த்தைகளை நடாத்துகின்றது, என புதிதாக உதையமாகியிருக்கின்ற தூய முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஓர் அமைப்பு தெரிவிக்கின்றதே என ஊடகவியாலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த இரா.சம்மந்தன்….
அது ஒருதப்பான அபிப்பிராயம் மர்கூம் அஸ்ரப்பின் காலம் தொடக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அஸ்ரப் தலைமை தாங்கிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடதாத்தியது. அத நீண்ட காலமாக நடைபெற்று வந்த விடையம், என்றாலும் அஸ்ரப் அவர்கள் இறந்த பின்னர் நாங்கள் முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வந்திருக்கின்றோம்.
எவரையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை, எவரையும் நாங்கள் உதாசீனம் செய்யவில்லை எவருடனும் நாங்கள் பேசத்தயார். எல்லோரிமமும் நாங்கள் பேசி தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய விடையங்களை ஒருமித்து நாங்கள் எடுக்க விரும்புகிறோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment