மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் விபுலானந்தா சிறுவர் இல்ல மாணவர்களுக்குa ஞாயிற்றுக் கிழமை (10) அடிப்படை முதலுதவிப் பயிற்றிநெறி ஒன்று நடைபெற்றது.
ஏற்படும் இடர்களுக்கு மாணவர்கள் எவ்வாறு முதலுதவி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும், முதலுதவி செயற்பாட்டின்போது கருத்தில் கொள்ள வேண்டியவைகள், உள்ளிட்ட பலவிடையங்கள் தொடர்பில் இதன்போது விளக்களமளிக்கப்பட்டதுடன், முதலுதவிப் பெட்டி ஒன்றும் இல்லத்திற்கு வழங்கிவைக்கப்பட்டன.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பயிற்சியில் முதலுதவிப் பயிற்சி போதனாசிரியரும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத்தலைவருமான த.வசந்தராசா மற்றும் முதலுதவிப் பயிற்றுவிப்பாளர் ச.கணேசலிங்கம், போரதீவுப்பற்றுப் தலைவர் வி.சக்திவேல், பழுகாமம் விபுலானந்தா சிறுவர் இல்லத்தின செயலாளர் ஆ.பிரபாகரன் இல்ல மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment